ஆசிய கோப்பை சதுரங்கத்தில் பதக்கவேட்டை நடத்தும் தமிழக அரசு பள்ளி மாணவி

 

அனைவருக்கும் வணக்கம்.ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்று நமது சர்வாணிகா சாதனை. 


இலங்கை CITRUS - வாஸ்கதுவாவில் 03-12-2022 முதல் 11-12-2022 வரை நடைபெற்று கொண்டிருக்கும் 16வது மாபெரும் ஆசிய சதுரங்க போட்டி Rapid,blitz, standard என மூன்று பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.

இதில் முதல் பிரிவில்
 (Under-7 rapid) மொத்தம் 7 சுற்றுகளில் 7 வெற்றிகளை பெற்று தங்கம் வென்றுள்ளார் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மேற்கு தொடக்கப்பள்ளி மாணவி நமது சர்வாணிகா.

மேலும் 
இரண்டாம் பிரிவில் (Under-7 blitz பிரிவில்)உங்கள் அனைவரது நல்லாசிகள் மற்றும் வாழ்த்துக்களுடன், நமது இந்திய வீராங்கனை சர்வாணிகா (வயது -7) நடைபெற்ற 7 சுற்றுகளில் 7 வெற்றிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன்மூலம் ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கங்கள் வென்று (blitz மற்றும் rapid பிரிவில்)சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், 
(INDIA) இந்தியா வீராங்கனை சர்வாணிகா தங்க பதக்கமும்
 (7 சுற்றுகளில் 7 வெற்றிகள்)

(KAZAKHSTAN) கஜகஸ்தான் வீராங்கனை அபிபுல்லா இன்சு வெள்ளி பதக்கமும் (7க்கு 6 வெற்றிகள்),

(SRILANKA)
 இலங்கை வீராங்கனை அகஸ்னா வெண்கல பதக்கமும்
(7க்கு 5.5 வெற்றிகள்) வென்றுள்ளனர்

என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

மூன்றாம் பிரிவிலும் (standard) முன்னேறி முழு வெற்றிகளுடன் தங்கம் வென்று,
ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களுடன் புதிய சாதனை படைக்க வாழ்த்த வேண்டுகிறோம்...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.