ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும்; அதற்கான ஹால்டிக்கெட், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம்


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வ வாரியத்தின் அறிவிக்கை எண் 01.2022 நாள். 7.3.2022ன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – – IIற்கான கணினி வழித்தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 31.1.2023 முதல் 12.2.2023 வரை இருவேளைகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என 3.1.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிக்கை செய்தி மூலம் வெளியிடப்பட்டது.


தற்போது 3.2.2023 முதல் 14.2.2023 வரையிலும் நடைபெற உள்ள கணணி வழித்ேதர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் இன்று வெளியிடப்படுகிறது.



தற்போது தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி சீட்டு – 1 (District Admit Card – 1) இன்று 27.01.2023 முதலும், தேர்வி மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு 2 (Venue –Admit Card –II) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது USER ID மற்றும் Password ஐ உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு வாரிய அறிவிப்பு இதோ



தேர்வு கால அட்டவணை



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.