எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு (SA) தேர்வு குறித்த ஐயங்களும், அவற்றிற்குரிய விளக்கமும் (Ennum Ezhuthum - Term 2 - Summative Assessment (SA) Exam - FAQs and their explanation)*

 *எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு (SA) தேர்வு குறித்த ஐயங்களும், அவற்றிற்குரிய விளக்கமும் (Ennum Ezhuthum - Term 2 - Summative Assessment (SA) Exam - FAQs and their explanation)*


கேள்வி:1.


 TN EMIS APP மூலம் தொகுத்தறி தேர்வு நடத்த வேண்டுமா?


*ஆம்... கட்டாயம் TN EMIS APP மூலம் Online வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு 13.12.2022 முதல் 23.12.2022 வரையிலான கால கட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் இந்த Online தேர்வு மதிப்பீடு மட்டுமே தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்படும்.


கேள்வி:2.


 TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF எழுத்து தேர்வுக்குரிய வினாத்தாள்கள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வு கட்டாயம் நடத்த வேண்டுமா? 


அப்படி வினாத்தாள்கள் வழியே வைக்கப்படும்  தொகுத்தறி மதிப்பீடு கணக்கில் தொகுத்தறி மதிப்பீடாக (SA) ஏற்றுக் கொள்ளப்படுமா?


*TN EMIS APP வழியே வெளியிடப்படும் PDF வடிவிலான வினாத்தாள்கள் கொண்டு இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வை கட்டாயமாக நடத்த தேவையில்லை...


 *Optional ஆக எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழியே எழுத்து தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பும் ஆசிரியர்கள்  வினாத்தாள்கள் வழியே தொகுத்தறி தேர்வை Online தேர்வுடன் இணைந்து நடத்தி கொள்ளலாம்


*அப்படி வினாத்தாள் வழியே 1 & 2 & 3ம் வகுப்புகளுக்கு தொகுத்தறி தேர்வு நடத்தினாலும் அந்த மதிப்பீடை தொகுத்தறி மதிப்பீடாக கணக்கிடப்படாது


கேள்வி:3. 

1 & 2 & 3ஆம் வகுப்புக்குரிய தொகுத்தறி PDF வினாத்தாள்கள் BRC மூலம் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படுமா?


*BRC மூலம் விலையில்லாமல் வினாத்தாள்கள் வழங்கப்படாது.... எழுத்து தேர்வை விரும்பும் 1 & 2 & 3ம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் தாமே தமது சொந்த பொறுப்பில் வினாத்தாள்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.