வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் தேதிகள் 👇

 *தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இந்த மாதம் நவம்பரில் வெளியிடப்பட உள்ளது.*


இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல்  பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை இந்த

நவம்பர் மாதம் 


12.11.2022, சனி


13.11.2022 ஞாயிறு

மற்றும்


நவம்பர் மாதம்

26.11.2022, சனி

27.11.2022 ஞாயிறு


ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில்01.11.2022 உள்ள வாக்குச்சாவடியில் *வாக்காளர் சிறப்பு முகாம்*

*காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.*


இதில் 18 வயது பூர்த்தியடைந்த/பூர்த்தி அடைய உள்ள ஆண்கள் ,பெண்கள்  (01.01.2005 அன்று அல்லது அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்).


*புதிய வாக்காளர்கள்* அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்குசென்று_படிவம்(6) ஐ பூர்த்திசெய்து தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள முடியும். 


படிவம் 6B வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண் இணைப்பதற்கான படிவம்


பெயர் நீக்கத்திற்கு படிவம்–7 ம்,


வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம், 

முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் ,


ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும்  இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.