மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அப்டேட்: தசரா பண்டிகைக்குப் பின் மும்பையில் கூடுகிறது 8வது ஊதியக் குழு கூட்டம்!
லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிச்சூழல், அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் சவால்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சன் பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த உயர்மட்ட ஊதியக் குழு, நாடு முழுவதும் பெறப்படும் அனைத்து பரிந்துரைகளையும் கவனமாக ஆய்வு செய்து தனது இறுதி அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கும்.
சம்பள உயர்வு
இதுவரை பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும், 8வது ஊதியக் குழுவின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பள உயர்வு மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த இறுதி விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஙஇந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமலுக்கு வரும் பட்சத்தில், நாட்டின் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் படிகளில் மிகப்பெரிய சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
Source. Malai malar

