அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி!*

 *அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி!*


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த எதிரொலியாக மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாளையே (25.09.2026) சம்பளத்தை வரவுவைக்க நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


வாரத்திற்கு 5 நாள்கள் வேலை போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செப். 28 முதல் 30-ஆம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.