ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 


ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு 01.09.2025 க்கு முன்பு பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் 

விண்ணப்பிக்க முகவரி இதோ 

http://www.trb.tn.gov.in

*சிறப்பு தகுதித் தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்*


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) நடத்துவதற்கான அறிவிக்கை A (Website: http://www.trb.tn.gov.in) 19.11.2025 இன்று வெளியிடப்படுகின்றது. 


இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணிபுரியும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 20.11.2025 முதல் 20.12.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


நான்: 19.11.2025


இடம்: சென்னை-06

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.