சாப்பாட்டுக்கு ஊறுகாயா? இல்லை ஊறுகாய்க்கு சாப்பாடா? மாணவர்கள் கல்வி பாதிப்பு குறித்து ஆசிரியர்கள் வேதனை.

 சாப்பாட்டுக்கு ஊறுகாயா? இல்லை ஊறுகாய்க்கு சாப்பாடா? மாணவர்கள் கல்வி பாதிப்பு குறித்து ஆசிரியர்கள் வேதனை.

*கல்வி அமைச்சர் கவனத்திற்கு செல்லுமா ?*


 *கலைத் திருவிழா, கலைஞர் நூற்றாண்டு விழா போட்டி*

* திரைபடம் வினாடிவினா போட்டி

* தேன்சிட்டு வினாடிவினா போட்டி

*அண்ணா பிறந்தநாள் போட்டி , பெரியார் பிறந்த நாள் போட்டி, வனத்துறை சார்ந்த போட்டி, தமிழ் திறணறித் தேர்வு சார்ந்த பயிற்சிகள்*


 *தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான போட்டி, தகவல் அறியும் உரிமைச் சட்டம்*தொடர்பான போட்டி,*


*இப்படியே காலையிலிருந்து மாலை வரை எண்ணற்ற * *போட்டிகள் நடத்தி அதனை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.*


 *அரையாண்டு *தேர்வுக்கு இன்னும் 40-க்கும் குறைவான வேலை நாட்கள் இருக்கும் நிலையில், மிக அதிகப்படியான பாடத்திட்டம் நடத்தப்பட வேண்டிய நிலையில் காலையிலிருந்து மாலை வரை எத்தனை செயலையும் செய்யச் சொல்லி சித்தரவதை செய்வது மிகக் கொடூரமானதாக உள்ளது. இது கற்றல் கற்பித்தலுக்கு எள்ளளவும் பயன் தராதது.*


 *சாப்பாட்டுக்கு ஊறுகாயா? ஊறுகாய்க்கு சாப்பாடா? என்ற நிலையில் திக்குத் தெரியாத திசையில் பிரேக் இல்லாத வாகனம் போல செல்லக்கூடிய எங்களது நிலை என்று மாறுமோ இந்த சாபக்கேடான சூழ்நிலை?*


*ஏற்கனவே பின் தங்கிய மாணவர்களுக்கு எந்த வகையிலும் முழு கவனம் செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை மிக வருந்தத்தக்கதாக உள்ளது.*


*பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் உள குமுறலாக …..*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.