எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணித்து போராடும் இடைநிலை ஆசிரியர்கள்

 


*இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி கடந்த 28.09.2023 முதல் தொடர்ந்து 5-வது நாளாக அஹிம்சை வழியிலான காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சென்னை DPI ல் நடத்தி வருகிறோம்.*



*இதுவரை இந்த போராட்டத்தில் 217 ஆசிரியர்களுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பி வருகின்றனர்.*



*ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த ஒற்றை கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம்.*


*இதற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் உள்ள ஆசிரியர்களும் களத்தில் இல்லாமல்  சூழ்நிலையால் வர முடியாத ஆசிரியர்களும் முழுவதுமான ஆதரவை அளிக்க வேண்டும்.*



*இடைநிலை இனம் அழிந்து கொண்டிருப்பதை நன்கு உணர்ந்த எம்மின தோழமை மூத்த ஆசிரியர் சங்கங்களும், இன உணர்வோடுள்ள  ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.*


*ஜே.ராபர்ட்*


*மாநில பொதுச்செயலாளர்*


*SSTA- இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.