இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் . வீரத்தமிழர் மாவீரர் அழகுமுத்து கோன் பற்றி தெரிந்து கொள்வோம்

 


இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் 

மாவீரன் அழகுமுத்துக்கோன் நெல்லை மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தவர் . தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன். தாய் அழகு முத்தம்மாள். தந்தை எட்டையபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார் . 1725 ஆம் ஆண்டு மன்னர் அழகு முத்து கோன் கட்டாலங்குளம் மன்னரானார்.

1728 ஆம் ஆண்டு விடுதலை வீரர் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தார். 1750 இல் தந்தை மன்னர் அழகுமுத்து கோன் போரில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து தனது 22 வது வயதில் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் அழகுமுத்துக்கோன் . முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்து பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுத்தார். வீரன் அழகுமுத்துக்கோன் தான் முதன் முதலாக ஆங்கிலேயருக்கு எதிராக 1759 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் போரை தொடங்கினார்.

முதல் சுதந்திர போரில் ஆங்கிலேயரிடம் மாட்டிய வீரன் அழகுமுத்துக்கோன் பீரங்கியில் கட்டப்பட்ட நிலையில் கூட மன்னிப்பு கேட்காமல் யாரையும் காட்டிக்கொடுக்காமல் பீரங்கிக்கு பலியானார் அழகுமுத்து கோன்.
வீரஅழகுமுத்துக்கோனுக்கும்,
மருதநாயகதிற்கும்
பெத்தநாயக்கனூர் கோட்டையில்
போர் நடந்தது. வீர அழகுமுத்துவின்
வலது கால் சுடப்பட்டது. இருப்பினும்
மூன்று மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன்
மன்னிப்பு கேடக மறுத்துவிட்டார்.
பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள்
வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன்
நின்ற வீர அழகுமுத்துக்கோனும்
அவருடைய 6 தளபதிகளும் மார்பில்
சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். பீரங்கி முன்நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சார்ந்தவர்களை காட்டிக் கொடுக்கவில்லை.  இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதலில் வித்திட்டவர் அழகுமுத்துக்கோன். கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் இருந்து வலது புறமாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கட்டலாங்குளம் கிராமம் உள்ளது அவருக்கு அங்கு நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.