தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்வு(NMMS) 25.2.2023இல் நடைபெறும். அறிவிப்பு இதோ



_*NMMS  தேர்வு 25/02/ 2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.*_


2022-2023 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் , 2023 பிப்ரவரி மாதம் 25 - ஆம் தேதி ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.


இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.01.2023 . மேலும் , https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.