ஆசிய கோப்பை சதுரங்க போட்டியில் தங்கம் வென்ற அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசுப்பள்ளி மாணவி


 அனைவருக்கும் வணக்கம்.

(SRI LANKA)இலங்கை CITRUS - வாஸ்கதுவாவில் 03-12-2022 முதல் நடைபெற்ற 16வது மாபெரும் ஆசிய சதுரங்க போட்டியில்

(Under-7 Rapid பிரிவில்)

உங்கள் அனைவரது நல்லாசிகள் மற்றும் வாழ்த்துக்களுடன், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(மேற்கு) இரண்டாம் வகுப்பு மாணவி,

நமது இந்திய சதுரங்க வீராங்கனை சர்வாணிகா (வயது -7) நடைபெற்ற 7 சுற்றுகளில் 7 வெற்றிகள் பெற்று தங்கம் வென்று ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், 

(INDIA) இந்தியா வீராங்கனை சர்வாணிகா தங்க பதக்கமும் (மொத்தம் 7 சுற்றுகளில் 7 வெற்றிகள்)

(SRILANKA) இலங்கை வீராங்கனை ஹலங்கோடா வெள்ளி பதக்கமும் (7க்கு 6 வெற்றிகள்),

(KYRGYZSTAN) கிர்கிஸ்தான் வீராங்கனை ஷர்ஷிபவா ரயல்யா வெண்கல பதக்கமும்(7க்கு 5 வெற்றிகள்) வென்றுள்ளனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.