பொறியியல் பட்டத்துடன் B.Ed., படித்தவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


*பொறியியல் பட்டத்துடன் பி.எட்- பட்டதாரி ஆசிரியராக நியமிக்க உத்தரவு*


தமிழக அரசு அறிவிப்பின்படி பொறியியல் பட்டம் பெற்று பிஎட் படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிகாட்டுதல்படி, பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிக்கலாம் என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற உரிய பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2015-17 காலகட்டத்தில் பிஎட் கணிதம் படிப்பில் சேர்ந்து, ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்ற சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஏ.ராக சைனி பிரியா, பொறியியல் முடித்து பிஎட் முடித்தவர்களை கணக்கில் கொள்ளாமல், பிற இளநிலை கலை, அறிவியல் பாடங்களில் பிஎட் முடித்தவர்களையே பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பொறியியல் பட்டதாரியான மனுதாரர் பிஎட் படிப்பை முடித்து ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை 4 வாரங்களில் ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.