கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்*_அமைச்சர் அன்பில் மகேஷ்

 _*கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்*_


மழையால் அதிக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


திங்கள் கிழமை முதல் மழை பெய்து வருவதால் அன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மழை பெய்யும் நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.


மழை பெய்யும் நாட்களில் மாணவர்களின் நிலையையும், பெற்றோர்களின் நிலையையும் கருதி விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அறிவிப்பு வெளியிடப்பட்டது. மிகக் கனமழை நாட்களைத் தவிர கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.


எனவே எத்தனை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதோ அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் முழு வேளை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி நவம்பர் இறுதி வரை பெய்யும்.சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்தப் பருவமழையில் அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.


இந்தநிலையில், இந்த மழை காரணமான விடுமுறை காரணமாக குறையும் வேலை நாட்களின் எண்ணிக்கையை ஈடுகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.