சூரிய கிரகணம் 2022 செய்யவேண்டியது. செய்ய கூடாதது

 *சூரியகிரகணம்* *2022.*🌄* 🌄🌄

💥 *இந்த சுபகிருது வருஷம் ஐப்பசி மாதம் 8 ஆம் தேதி 25.10.2022 (தீபாவளிக்கு மறுநாள்)  செவ்வாய் கிழமை மாலை 5.14 முதல் 5.42 வரை நம் தமிழ்நாட்டில் சம்பவிக்கிறது.*


💥 யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்


கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.


🌄 என்ன செய்யக்கூடாது... 


கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம்.


💥💥🪱 இந்த முறை கேது கிரஹஸ்தமாக சம்பவிப்பதால் கிரஹணம் நடைபெறும் சுவாதி நட்சத்திரம் மற்றும் அதற்கு முன்பும் பின்பும் உள்ளதான சித்திரை மற்றும் விசாகம் நட்சத்திரம் மேலும் கிரஹணம் நடைபெறும் சுவாதி நட்சத்திரத்தின் அனு,த்ரி ஜென்ம நட்சத்திரங்களான திருவாதிரை மற்றும் சதய நட்சத்திரகாரர்கள் (அதாவது சுவாதி,திருவாதிரை,சதயம்,சித்திரை மற்றும் விசாக நட்சத்திரம்) பரிகாரம் செய்வது உத்தமம்.

பரிகாரம் என்பது கிரஹண காலத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பதும், கிரஹணத்திற்கு  முன்பும் பின்பும் குளிப்பதும், இறைவனை நினைப்பதும்,முன்னோர்களுக்கு எளிய முறையில் தர்ப்பணம் கொடுப்பதும், கிரஹணம் முடிந்தபின் சிவனுக்கு (சூரியனுக்கு அதி தேவதை) அர்ச்சனை செய்வதும் நல்ல பலன்களை கொடுக்கும்.


🌄 கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்... 


💥💥💥🏵️ கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.


💥🔥💥🔥 பல மடங்கு புண்ணியம்... 


சூரிய கிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் உண்டாகும். கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.

💥💥🔥 தீபாவளிக்கு விரதம் இருப்பவர்கள் (கேதார கெளரி விரதம் இருப்பவர்கள்)  திங்கட்கிழமை காலை 6 மணிமுதல் மாலை 6.30 மணி (5.41 க்கு மேல் அமாவாசை)  வரையிலும் அமாவாசை விரதம் இருப்பவர்கள் மறுநாள் கிரஹணத்தன்றும் காலை 6 மணிக்கு மேல் கிரஹணம் முடிந்த பின் மாலை 6.30 மணிக்குதான் விரதம் முடிக்க வேண்டும்.  கிரஹண நேரத்தில் விரதம் இருப்பது கோடி புண்ணியம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.