வருமானவரி இல்லாத இந்திய மாநிலம் ! பான் கார்டும் யாருக்கும் தேவையில்லாத மாநிலமா! முழு விபரம் இதோ

 *வருமானவரி இல்லாத இந்திய மாநிலம் பான் கார்டும் யாருக்கும் தேவையில்லாத மாநிலம்*


ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட்டின் போது, வருமான வரி வரம்பு அதிகரிக்காதா என்கிற ஏக்கம் ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழுகின்றது. அப்படி இருக்கும் பொழுது வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத ஒரு மாநிலம் இந்தியாவில் உள்ளது என்பது உங்களுக்கு ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும்.

இந்தியாவின் வட கிழக்கே அமைந்துள்ள மிகச் சிறிய  மாநிலமாகும். சிக்கிம் மாநிலத்தில் சுமார் 6.74 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு வருமான வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கே உள்ள மிகச் சிறிய மலைப்பாங்கான மாநிலம் சிக்கிம். இதன் வடக்கு மற்றும் வடகிழக்கில் திபெத், கிழக்கில் பூட்டான், மேற்கில் நேபாளம் மற்றும் தெற்கில் மேற்கு வங்காளம் ஆகியன உள்ளன. பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு அழகிய அரசாங்கமாகச் சிக்கிம் இருந்தது.

இந்திய சுதந்திரத்தின் பொழுது, பழைய சிக்கிம் அரசின் சட்டங்கள் அப்படியே தொடரும் என்கின்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது.

இதனை நிறைவேற்றும் பொருட்டு இந்திய அரசியலமைப்பில் 371 (எஃப்) என்கின்ற சிறப்பு அந்தஸ்து உருவாக்கப்பட்டது.

இதன் காரணமாகவே சிக்கிம் மாநிலம் தன்னுடைய 1948 ம் ஆண்டு வருமான வரிக் கையேட்டை பின்பற்றியது. இந்த வரிக் கையேட்டின் கீழ், சிக்கிம் மாநில மக்கள் மத்திய அரசிற்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

சிக்கிம் மாநில வரிச் சட்டங்கள், மத்திய அரசால் 2008ம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டன. அதற்குப் பதில் அங்கு மத்திய நிதிப் பிரிவு சட்டம் 10 (26AAA) செயல்படுத்தப் பட்டது. இந்த அறிவிப்பின் படி சிக்கிம் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்குப்பான்கார்டும் தேவைப்படுவதில்லை. அதோடு மட்டுமல்ல, இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளரான SEBI, சிக்கிம் மாநில மக்களுக்கு இந்திய பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு செய்வதற்கு, பான் கார்டு அவசியம் என்கின்ற விதியிலிருந்தும் விலக்கு அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.