இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணி - சிறப்புப் பணி அலுவலரின் சுற்றறிக்கை..


*இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணி - சிறப்புப் பணி அலுவலரின் சுற்றறிக்கை...*


மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு ITK தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...



1. வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்


2. வருவாய் வட்டாட்சியர் செய்ய வேண்டிய பணிகள்...


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி


விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தல்


மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்


தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் உத்தரவு...


கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விபரங்கள் பகிரப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும்.


 இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.