CPD என்ற புதிய பயிற்சி. ஆசிரியர்களுக்கு நன்மையா? சிக்கலான? தெரிந்து கொள்வோம் வாங்க

 NEP 2019ன் படி, CPD என்பது,


1) ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வருடமும் 50 மணி நேரம் திறன் மேம்பாடு பற்றிய பாடங்களை நேரடி வகுப்பாகவோ அல்லது இணைய வழியாகவோ கட்டாயம் கற்க வேண்டும்.


2) இந்த பாடங்களில் தொடர்ச்சியான மதிப்பீடு இருக்கும். 


3) இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு 5 வகையான RANK வழங்கப்படும்.


4) Early Teacher (without tenure), Early Teacher (with

tenure), Proficient Teacher, Expert Teacher, and Master Teacher ஆகிய ஐந்து பிரிவுகளாக ஆசிரியர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். 


5) ஆசிரியர்கள் பெறும் தரமதிப்பீட்டின்படி ஊதிய உயர்வு, பதவி உயர்வு இருக்கும். 


6) தமிழ்நாடு அரசு இதுவரை Seniority Based Salary Increment மற்றும் Seniority Based Promotion என்பதைத்தான் பின்பற்றி வருகிறது. ஆனால் இதில்  Merit Based Salary Increment மற்றும் Merit Based Promotion என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. 


இந்தவகையில் இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, இதன் உள்ளடக்கமும் மாறியிருக்கிறது என்பதை புரிந்துகொண்டு ஆசிரியர்கள் இதை கவனமுடன் அணுக வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.