மீண்டும் தள்ளிப்போகிறது பள்ளி திறப்பு?? அமைச்சர் ஆலோசனை

 


தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதன் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்திருக்கிறார்


தமிழகத்தில் அக்னி வெயில் முடிந்த பிறகும் கூட கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி கண்டிப்பாக பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.


இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை நிர்வாகிகளுடன் பள்ளி திறப்பு தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். 


இதனையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கு இரண்டு முக்கிய தேதிகளை தேர்வு செய்திருப்பதாகவும் முதல்வரின் அறிவிப்பின்படி அந்த இரண்டு தேதிகளில் ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும் அன்பின் மகேஷ் தற்போது அறிவித்திருக்கிறார். மேலும், பள்ளி திறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.