2000 ரூபாய் நோட்டு செல்லாது. மக்கள் என்ன செய்ய வேண்டும். விளக்கம் இதோ

 


*2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுகிறது!*


மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யலாம். வழக்கமாக பணம் டெபாசிட் செய்வது போலவே இதைச் செய்யலாம்.


2000 ரூபாய் நோட்டை வங்கிக்கிளைகளில் கொடுத்து வேறு நோட்டுகளாக மாற்றியும் கொள்ளலாம். ஒருவர் ஒரு நாளில் 10 நோட்டுகளை மட்டுமே கொடுத்து மாற்ற முடியும்.


மே 23 முதல் செப்டம்பர் 30 வரை இப்படி மாற்றிக்கொள்ளலாம்.


வங்கிகள் தவிர ரிசர்வ் வங்கி கிளைகளிலும் இப்படி 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ள முடியும்.


வங்கிகளில் இனி பணம் எடுக்கும்போது 2000 ரூபாய் நோட்டு வழங்கப்பட மாட்டாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.