தொடக்கக் கல்வித் துறை - "BT பதவி உயர்விற்கு TET கட்டாயம்!" என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி


தொடக்கக் கல்வித் துறை  - "BT பதவி உயர்விற்கு TET கட்டாயம்!" என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி


1.1.22 Panel முன்னரே தயாரிக்கப்பட்டிருந்த சூழலில், *1.1.23 Panel தயாரிப்பு தொடர்பான செயல்முறைகளை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் வெளியிட்டிருந்தார். அதில் TET தேர்ச்சி பெற்றிருப்போரில் இருந்து பட்டதாரி முன்னுரிமை & தேர்ந்தோர் பட்டியலையும் தனித்தனியே தயார்செய்து கொள்ளக் குறிப்பிட்டிருந்தார்.*


இச்செய்தி சமூக ஊடகங்களில் BT பதவி உயர்விற்கு TET கட்டாயம் என்று காட்டுத் தீ போல பரவியது.


இது தொடர்பான தெளிவுரை கேட்கப்பட்ட நிலையில் கீழ்கண்ட தகவல் அளிக்கப்பட்டது


"அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் வணக்கம். *சென்ற ஆண்டு முன்னுரிமை பட்டியல்  மற்றும் தேர்ந்தோர் பட்டியல் சென்ற ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளை இந்தாண்டும் கடைபிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை அறந்தாங்கி* "



முன்னதாக, நீதிமன்றம் அளித்த தீர்ப்பொன்றில் பதவி உயர்விற்கும் TET அவசியமாக்கப்பட வேண்டுமென்று அரசிடம் பரிசீலிக்கக் கூறியிருந்தது. ஆனால், அரசு சார்பில் இது குறித்து தெளிவான விளக்கமோ / அரசாணையோ வெளியாகவில்லை. இத்தகைய சூழலில் தான் ஒருவேளை நாளை அத்தகைய முடிவு இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்டுவிட்டால், அதற்கும் சேர்த்துத் தாயாராக இருக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக அதிலும் ஒரு Panel தயாரிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கக் கூடும்.


நீதி மன்றத் தீர்ப்புகள் கலந்தாய்வு அன்றுகூட வெளியாகி கலந்தாய்வையே நிறுத்தும் சூழல் அவ்வப்போது உருவாகியதால் இது போன்ற முன்னெச்சரிக்கைக்குள் அலுவலர்கள் இறங்க நேரிடுகிறது.


அதே நேரம், முறையான துறை ரீதியிலான உயர்மட்ட ஆணைகள் இல்லாது, கீழ்மட்ட அலுவலர்கள் ஒருசிலர் தன்னிச்சையாகச் செய்யும் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அலுவலக நடைமுறைக்குள்ளானதாக மட்டுமில்லாது சமூக ஊடகங்களில் பரவுவதால் நாளை இதனையே *மற்ற அலுவலர்களும் நடைமுறைப்படுத்தும் நிலைக்குள் தள்ளப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாவக நேரிடக்கூடும். மேலும், அரசே இதுபோன்ற செயல்களை அனுமதித்து ஆசிரியர்கள் மத்தியில் ஆழம் பார்க்கிறதோ என்ற ஐயமும் ஆசிரியர்கள் மத்தியில் எழுவதால், அரசிற்கு எதிரான அவப்பெயர் மேலும் அதிகரிக்கிறது.*


ஒருவகையில், நேற்று பரப்பட்ட வதந்தியால் பற்றி எரிந்த தீயே ஏற்ற காலத்தில் சங்கம் மூலமாகத் தெளிவைப் பெறுவதற்கான அழுத்தத்தை உண்டாக்கியது என்றும் கூறலாம்.


கடந்த காலங்களில் *இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உரிமையைப் பறித்து ஒரே பணிக்கு 3 வெவ்வேறு ஊதியங்கள் வழங்குமாறு வழிவகை செய்த  அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் நடத்திய கடந்த ஆண்டு கலந்தாய்வுகளில், மாறுதல் கலந்தாய்வுகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் *எந்தவித அரசாணையோ, செயல்முறைகளோ ஏதுமின்றி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கு மட்டும் இயற்கைக்கு முரணாக Station Seniority முறை ஒழிக்கப்பட்டு Appointment Seniority முறையைத் திடீரென இரவோடு இரவாகப் புகுத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராக மேலுமொரு கூடுதல் பாதிப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.