ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொணரும் “கனவு ஆசிரியர் தேர்வு” – வழிமுறைகள் வெளியீடு!



*ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொணரும் “கனவு ஆசிரியர் தேர்வு” – வழிமுறைகள் வெளியீடு!*


ஆசியர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் SCERT அமைப்பு கனவு ஆசிரியர் என்ற போட்டிதேர்வை நடத்தி வருகிறது. ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ள இந்த தேர்வின் வழிமுறைகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.


கனவு ஆசிரியர் தேர்வு:


தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களிடம் வாசிப்பு திறனை வளர்க்கும் நோக்கில் ஊஞ்சல், தேன்சிட்டு என்ற 2 பருவ இதழ்களை வெளியிட்டது. அதனை தொடர்ந்து ஆசிரியர்களும் தனது தனி திறமைகளை வெளிக்கொணரும் வகையில் “கனவு ஆசிரியர்” என்ற இதழ் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக SCERT அமைப்பு ஏப். 01ம் தேதி கனவு ஆசிரியர் என்ற போட்டி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ளோர் மார்ச் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வின் வழிமுறைகள்:


“கனவு ஆசிரியர்” தேர்வு ஏப்ரல் 1ம் தேதி இணைய வழியில் நடைபெறும். அதனால் ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தேர்வை எழுதலாம்.


இந்த தேர்வை எழுதுபவர்கள் முன்பக்க கேமரா கொண்ட கணினி, லேப்டாப் அல்லது ஆண்ராய்டு மொபைல் போனை பயன்படுத்தலாம்.


மேலும் இணையதளத்தின் வேகம் 2 Mbps ஆக இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் Google Chrome, Microsoft Edge, Firefox போன்றவைகள் இருக்க வேண்டும்.


தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும் வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன் இயங்கு நிலையில் இருக்க வேண்டும்.


அடுத்தாக தேர்வு தொடர்பான பாடத்திட்டம், மாதிரி வினா போன்ற விவரங்களை www.emis.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 18ம் தேதி பெறலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.