பள்ளி தலைமை ஆசிரியர்களை திணறடிக்கும் S.N.A கணக்கு மற்றும் கணினி வழி புள்ளி விபரப் பள்ளிப் பதிவுகளுக்கு கணினி உதவியாளர்களை நியமிக்கக் கோரிக்கை.

 *பள்ளி தலைமை ஆசிரியர்களை திணறடிக்கும் S.N.A கணக்கு மற்றும்  கணினி வழி  புள்ளி விபரப் பள்ளிப் பதிவுகளுக்கு கணினி உதவியாளர்களை நியமிக்கக் கோரிக்கை.*


*பள்ளி தலைமை ஆசிரியர்களை திணறடிக்கும் S.N.A கணக்கு; கணினி உதவியாளர்களை நியமிக்க கோரிக்கை S.N.A account of suffocating school headmasters; Request for Recruitment of Computer Assistants பள்ளி தலைமை ஆசிரியர்களை திணறடிக்கும் எஸ்.என்.ஏ., கணக்கு; கணினி உதவியாளரை நியமிக்கக் கோரிக்கை.*


*தமிழகத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களை அரசின் நிதியை கையாள உதவும் சிங்கிள் நோடல் கணக்கு சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. அதற்கென கணினி உதவியாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் பள்ளிகளில் புள்ளி விபர பதிவுகளை கணினி வழியில் உள்ளீடு செய்வதால் பள்ளி கற்பித்தல் பணி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, அதற்கும் வட்டார அளவில் தமிழ்நாடு முழுவதுமாக கணினி பயின்றோரை நியமிக்க வேண்டும்.*


*மாநில அரசு சிங்கிள் நோடல் கணக்கு எனப்படும் எஸ்.என்.ஏ., கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசின் நிதி நேரடியாக பள்ளி கணக்கில் வரவு வைக்கப்படும். அதை எடுத்து பள்ளி மேலாண்மை குழு உபகரணங்கள், மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு செலவழிக்கலாம்.*


*இந்த கணக்குகளை தலைமை ஆசிரியர்கள் கையாளுகின்றனர்.*


*மேக்கர் ஐ.டி., வெண்டர் ஐ.டி., செக்கர் ஐ.டி., என மூன்று தளங்களில் இயங்கும் இந்த இணையத்தில் ஒவ்வொரு தளத்திலும் 'கேப்ட்சாக்கள்' எனப்படும் குறியீடு கடவுச் சொல் வருகின்றன. இதில் ஒன்று தவறானாலும் மீண்டும் முதலில் இருந்து முயற்சிக்க வேண்டியுள்ளது. சில தடவைகளுக்கு மேல் முயற்சித்தால் 'லாக்' ஆகி விடுகிறது.*


*இது குறித்த கணினி பயிற்சி தலைமை ஆசிரியர்களுக்கு போதியளவு அளிக்கப்படவில்லை. ஏற்கனவே எமிஸ் இணையதளத்தை கையாளும் சூழலில் இதுபோன்ற பணிகள் கற்றல் செயல்பாட்டை குறைக்கும் வகையில் உள்ளது என தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.*


*மேலும் பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைகளில் முன்பு செக் பவர் இருக்கும் போது பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், நடத்துனரான தலைமை ஆசிரியர் கையெழுத்திடுவர். ஆனால் தற்போது எஸ்.என்.ஏ., முறையால் இரு கையெழுத்துக்கு வழியில்லாது, மறைமுகமாக பள்ளி மேலாண்மைக் குழுவின் அதிகாரத்தை குறைப்பது போல் உள்ளது என்கின்றனர்.*


*ஒரே வங்கியில் சென்னையில் தான் அப்டேட் செய்யப்படுவதால் சர்வரில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் பணம் செலவளிக்க அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதே நேரம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவளிக்க நிர்பந்தப்படுத்தப்படும் நெருக்கடியும் உள்ளதால் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் திண்டாடுகின்றனர். எவ்வளவு பணம் வருகிறது என்றும், அதை எவ்வாறு கணக்கீடு செய்து திட்ட வரையறைகள் செய்வது என்பதற்கும் கூட நேரம் இல்லாத சூழல் உள்ளது.*


*எஸ்.என்.ஏ., கணக்கை கையாள கணினி நிலை உதவியாளரை நியமிக்க வேண்டும் என்றும், விரைந்து நிதியை விடுவிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்றும் கணினி வழி  புள்ளி விபரப் பள்ளிப் பதிவுகளுக்கு கணனி தெரிந்த தகுதியான  தனிநபர் நியமிக்கப்பபட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தலைமை ஆசிரியர்களும்  வலியுறுத்துகின்றனர்.*

*இவை அனைத்தும் மாணவர் கல்வி நலன் கருதியும் பள்ளிக் கட்டமைப்பு சார்ந்த நிர்வாக நடைமுறை எளிமையாக்கப்பட்டு மாணவர்களுக்கு பயனுறு வழியில் இருக்க வேண்டும் என்ற அக்கறையில் இச் செய்தி வெளியிடப்படுகிறது. அரசு, உடனடிக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு மாணவர் நலன் சார்ந்து விரைந்து செயல்படுத்த வேண்டுமாய் தலைமை மற்றும் அனைத்து நிலை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்கிறார்கள்*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.