மகப்பேறு பெண்கள் 10 ஆண்டு வரை PhD முடிக்க கால நிர்ணயம்.! யுஜிசி உத்தரவு*


*மகப்பேறு பெண்கள் 10 ஆண்டு வரை PhD முடிக்க கால நிர்ணயம்.! யுஜிசி உத்தரவு*

பெண்கள் மகப்பேறு விடுப்பு ஆகிய காரணங்களுக்காக பத்தாண்டுகள் வரை பிஎச்டி முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிஎச்டி படிப்பிற்கான விதிமுறைகளில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. எம்ஃபில்களை ரத்து செய்தல், முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடப் பணியை தளர்த்துதல் மற்றும் நான்கு வருட பட்டப்படிப்புப் படிப்பை முடித்த பிறகு பிஎச்டிக்கு பதிவு செய்ய விண்ணப்பதாரர்களை அனுமதித்தல் போன்ற முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 

அதன்படி 4 ஆண்டு இளங்கலை முடித்தவர்கள் 75% மதிப்பெண் பெற்றிருந்தால் பிஎச்டி படிப்பில் சேரலாம். அதற்கு குறைவான சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் முதுகலை படிப்பில் ஓராண்டு (2 செமஸ்டர்கள் ) படித்து 55 % மதிப்பெண்கள் பெற்று பிஎச்டி படிப்பில் சேர வேண்டும். கடந்த காலங்களில் பிஎச்டி படிப்பில் சேரக்கூடியவர்கள் ஆய்விதழ்களில் கட்டுரைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் சமர்பிக்க வேண்டும் என்கிற விதி கட்டாயமில்லை. 

பெண்கள் மகப்பேறு விடுப்பு ஆகிய காரணங்களுக்காக பத்தாண்டுகள் வரை பிஎச்டி முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.